கிராம ஊராட்சி சேவை மையம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-07-26 14:50 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஆனைமங்கலம் ஊராட்சியில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிட பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது. ஆனால் கட்டிடம் பணிகள் முடிந்தும் தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. இதனால் கட்டிடம் முறையான பராமரிப்பின்றி கிடக்கிறது. மேலும், சுவர்களின் விரிசல்கள் ஏற்பட்டு கான்கிரீட் காரைகள் கீழே விழுத்தொடங்கி உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்களா?

படம் இல்லை

மேலும் செய்திகள்