மதுப்பிரியர்களின் கூடாரமான பஸ் நிறுத்தம்

Update: 2022-07-26 13:53 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் உள்ள திருவாவடுதுறை ஊராட்சிக்குட்பட்ட பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் கடந்த சில மாதங்களாக மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிவருகிறது. பகல் நேரங்களிலேயே பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து மதுகுடிக்கின்றனர். இதன்காரணமாக பஸ் நிறுத்தத்துக்கு வரும் பயணிகள், பெண்கள் முகம் சுழித்தபடி பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மதுபாட்டில்கள், டம்ளர்களை பஸ் நிறுத்தத்துக்குள் போட்டு குப்பைமேடாக மாற்றி வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தை மதுப்பிரியர்களின் பிடியில் இருந்து மீட்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்