ஆபத்தான கட்டிடம் அகற்றப்படுமா?

Update: 2022-07-26 13:49 GMT
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக கட்டிடத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், மேற்கூரை கான்கிரீட் முழுவதும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் சூழலில் இருக்கிறது. இதன் காரணமாக மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்