சென்னை நங்கநல்லூர் சுதந்திர தின பூங்காவில் இருந்த மணிகூண்டு நீக்கப்பட்டிருந்தது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியனது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக நீக்கப்பட்ட மணிக்கூண்டு மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுவிட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்துள்ளனர்