கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை ஆக்கிரமிப்பு காரணமாக மிகவும் சுருங்கிப்போய் விட்டது. தினசரி அதிகமான வாகனங்கள் செல்லும் இந்த சாலை மிகவும் குறுகிய நிலையில் காணப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அல்லல்பட்டு வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.