கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் ஒன்றியத்துக்குட்பட்டது கொண்டையம்பாளையம் ஊராட்சி. இங்குள்ள அய்யப்பன் நகரில் பழுதான மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி “தினத்தந்தி” புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பழுதான மின்கம்பம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய “தினத்தந்தி” நாளிதழுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.