உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கத்தில் பொதுமக்கள் போக்குவரத்து வசதிக்காக ரெயில்வே சுரங்கப்பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சுரங்கப்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.