அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழகவட்டாங்குறிச்சி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் முறையான கழிவறை பராமரிப்பு வசதி இல்லாமல் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவியர்கள் போதிய வசதி இல்லாமல் அவதி பட்டு வருகின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.