விஷ வண்டுகளால் அச்சம்

Update: 2023-09-10 18:11 GMT
புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்தில் விவசாய பண்ணை அருகில் உள்ள மரத்திற்கு கீழ் பகுதியில் விஷ வண்டுகள் கூடு கட்டியுள்ளன. இவை அந்த வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள், ஆடுகளையும், பொதுமக்களையும் விரட்டி, விரட்டி கடிக்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் விஷ வண்டுகளை அழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்