கடலூர் மாவட்டம் வடக்கு ஒன்றியம் புதுக்கடை கிராமத்தில் உள்ள ஏரியை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஏரியில் போதுமான அளவிற்கு தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.