கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் அருகே நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், வயதானவர்களை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்துவதால், அவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?