நெல்லிக்குப்பத்தில் சித்தூர்-கடலூர் வரை சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. இதில் நெல்லிக்குப்பம் பூலோக நாதர் கோவில் முதல் ஆலைரோடு வரை குறுகிய அளவில் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சரியான முறையில் விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.