ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது குறுக்கிடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே நெடுஞ்சாலையில் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.