தெருநாய்கள் தொல்லை

Update: 2023-09-03 14:14 GMT

அந்தியூர்-பர்கூர் ரோட்டில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டு அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் மீது விழுகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். சிறுவர்களை தெருநாய்கள் கடித்து காயப்படுத்தி வருகின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்