விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் அதிகம் தேங்கி இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.