கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் இரவில் மாடுகள் அதிக அளவில் உலா வருகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.