சென்னை ஆர்.கே. நகர் மணலிச்சாலை மெயின் ரோட்டில் உள்ள முனீஸ்வரர் நகர் 2-வது தெருவின் பெயர் பலகையில் விளம்பர அட்டைகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதனால் தெரு பெயர்கள் மறைக்கப்படுவதோடு கூரியர் கொடுக்க வருபவர்கள், மற்றும் தெருவுக்கு புதிதாக வருபவர்களும் சிரமப்படும் சூழல் ஏற்படுகிறது. தெரு பெயர் பலகைகளில் விளம்பர அட்டைகள் ஒட்டப்படுவது நிரந்தரமாக தடுக்கபப்டுமா?