அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் நோயாளிகள் தங்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் புகார் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் பெட்டியானது பராமரிப்பு இன்றி பூட்டப்படாமல் திறந்து கிடப்பதினால், இதனை நோயாளிகள் யாரும் பயன்படுத்துவது இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புகார் பெட்டியை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.