அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள துலாரங்குறிச்சி பஸ் நிறுத்தம் எதிரே வாகனத்தில் அடிபட்ட நிலையில் சாலையோரம் ஒரு தெருநாய் இருந்து கிடைக்கிறது. இந்த தெரு நாய் இருந்து சுமார் 4 நாட்கள் ஆவதால் அவற்றின் உடல் தற்போது இப்பகுதியில் கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டு நிற்பதுடன், அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நாயின் உடலை மண்ணில் புதைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.