சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. இந்த பகுதியை இரவில் கடந்து செல்லும் போது தெரு நாய்கள் குரைப்பதும் வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதும் தினமும் நடக்கிறது. இதனாலேயே இரவில் இந்த பகுதியை கடந்து செல்ல மக்கள் அச்சப்படுகிறார்கள். மக்களின் பயணம் சீராக அமைய தெரு நாய்கள் தொல்லை தடுக்கப்படுமா?