உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை அருகே உள்ள கீரப்பாளையம் கிராமத்தில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையம் பெரும்பாலும் பூட்டியே கிடப்பதால், சிகிச்சைக்காக நோயாளிகள் வெகுதூரம் செல்லும் நிலை உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.