விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது/ இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 10-ம் வகுப்பு முடித்தவுடன் மேல்நிலை வகுப்புகளுக்கு இந்த மாணவர்கள் நகர்ப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.