செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சி சண்முகாநகர் 10-வது தெருவில் மழைநீர் கால்வாய் பணி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் தெருவில் சிறுவர் பூங்கா, தனியார் பள்ளி உள்ளது. மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, அதிகாரிகள் விரைந்து மழைநீர் கால்வாய் பணியை முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.