விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தாயில்பட்டி, ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக வீடுகள் மற்றும் திறந்தவெளிகளில் பட்டாசு தயாரிக்கின்றனர். இதனால் வெடிவிபத்துகள் ஏற்படும் விபரீதம் உள்ளது. எனவே தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்ட விரோதமாக பட்டாசுகள் உற்பத்தி செய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.