விருதுநகர் மேல தெரு பகுதியில் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா?