நாய்கள் தொல்லை

Update: 2023-08-13 12:09 GMT
கடலூர் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சுற்றிலும் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. தெரு நாய்களால் இரவு நேரத்தில் பொதுமக்களால் சாலையில் தனியாக செல்ல முடியவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால், அவர்கள் அச்சத்தில் தவறி விழுந்து படுகாயம் அடையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி