புகார் பெட்டி செய்தி எதிரொலி; புதிய சாலை அமைப்பு

Update: 2023-08-09 18:02 GMT
கீழப்பாவூர் யூனியன் சிவநாடானூர் பஞ்சாயத்து திருமலாபுரம்- ராமநாதபுரம் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதாக மாரிமுத்து என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதன் எதிரொலியாக அங்கு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த தினத்தந்திக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்