நடுவீரப்பட்டு அருகே சென்னப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையை தனிநபர்கள் ஆக்கிரமித்து கடை வைத்திருந்தனர். இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்சென்றதால் அவதி அடைந்து வந்தனர். இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுத்தனர். இதில் மகிழ்ச்சி அடைந்த பயணிகள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.