கடலூர் பாரதி ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகே குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடந்தது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் குப்பைகளை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர். இதில் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.