கடலூர் மாவட்டம் மங்களூரை சுற்றிலும் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் வேப்பூர், திட்டக்குடியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து தான் வீரர்கள் வந்து தீயை அணைப்பார்கள். இதனால் காலவிரையம் ஏற்படுவதால், பாதிப்புகள் அதிகரிக்கிறது. எனவே மங்களூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.