கழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2023-08-02 15:22 GMT

செங்கல்பட்டு, மறைமலை நகராட்சிக்குட்பட்ட காட்டாங்குளத்தூர் சிவானந்த குருகுலம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகில் சில மாதங்களாக இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசுவதால் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நாளடைவில் இந்த கழிவுகள் ஒரு குப்பை கிடங்காக மாறுவதை தவிர்க்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்