அரியலூர் மாவட்டம் தா.பழூர் காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2020-21-ம் நிதி ஆண்டில் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சுகாதார வளாகம் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இயற்கை உபாதைகள் கழிப்பதினால் அவர்களை விஷ ஜந்துக்கள் கடிக்கும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.