சென்னை புது வண்ணார்பேட்டை எல்.ஐ.ஜி. காலனி 1-வது லேன் பகுதியில் அடிபம்பு ஒன்று உள்ளது. இதனை ஒட்டியுள்ள பகுதியில் மரக்கிளைகள், இலைதளைகள் போன்றவைகளோடு மரக்கழிவுகள் சேர்ந்து கிடப்பதால் இந்த இடம் எலி மற்றும் பாம்பு போன்ற விச ஜந்துக்குகளின் கூடாரமாக மாறி வருகிறது. அடிபம்பில் குடிநீர் பிடிக்க வரும் பொதுமக்களுக்கு அச்சத்தை விளைவிக்கும் வகையில் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.