மங்களூர் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பயன்படுத்தும் 2 வாகனங்கள் பழுதானதால், அவர்கள் முக்கிய தேவைகளுக்காக வாடகை வாகனங்களை பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் அரசு பணம் வீணாகி வருகிறது. எனவே வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பயன்படுத்துவதற்கு புதிய வாகனங்கள் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.