செங்கல்பட்டு, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 1 பம்மல் அலுவலகம் அருகில் பஜணைகோவில் தெரு சந்திப்பில் உள்ள சிமெண்டு சாலையில் மாடுகளை கட்டி வைத்துள்ளனர். இதனால் சாலை முழுவதும் மாட்டுச் சாணமாக உள்ளது. மேலும் இதனால் நோய் தொற்று பரவும் நிலையும், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தெருவில் நடந்தும், வாகனங்களில் செல்லும்போது மாடுகள் முட்டி விடுமோ என்ற அச்சத்துடன் செல்கின்றனர். இது குறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.