மானூர் யூனியன் அலங்காரப்பேரி கீழூரில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் அங்கு புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?