அந்தியூர் ஒன்றியத்துக்குட்பட்ட நகலூர் ஊராட்சி பெருமாபாளையம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் பகுதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்து சேதமானது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீரின்றி அவதிப்படுகிறார்கள். உடனே குடிநீர் தொட்டியை சீரமைத்து பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.