ஈரோடு சத்திரோடு வீரப்பன்சத்திரத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடந்தன. அங்கு முனியப்பன் கோவிலுக்கு எதிரில் ரேஷன் கடைகள் முன்பு நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது. அதில் கான்கிரீட் மீது கொக்கி வடிவில் கம்பிகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால் நடந்து செல்பவர்கள் பலா் கம்பி இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே கம்பியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.