விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பெரியவள்ளிக்குளம் 5-வது வார்டு பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் ஒருவித அச்சம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விஷப்பூச்சிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.