சென்னை தரமணி கனகம் நேரு தெருவில் தமிழ்நாடு வீட்டு வாரிய குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்புகளில் உள்ள சில வீடுகள் பழுடைந்து பராமரிப்பின்றி இருக்கிறது. சமீபத்தில் ஒரு வீட்டின் மேல் கூரை இடிந்து கீழே விழுந்து விட்டது. எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு பழுதடைந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டுகிறோம்.