விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சாலையில் செல்லும் பொதுமக்களை நாய்கள் துரத்துவதால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் நாய்க்கடியால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.