நாமக்கல் - மோகனூர் சாலையில் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளிட்ட கல்வி அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றை சுற்றிலும் ஏராளமான மரங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த காற்றுடன் கூடிய கனமழைக்கு சுற்றுச்சுவரை ஒட்டி இருந்த மரம் ஒன்று வேரோடு சரிந்து விழுந்தது. இந்த மரம் வழித்தடத்தில் விழுந்து கிடப்பதால் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி செல்வோர் கடும் அவதி அடைந்து வருகினறனர். எனவே இந்த மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-- ராமசாமி, நாமக்கல்.