கம்பருக்கு மண்டபம் அமைக்கப்படுமா?

Update: 2022-07-24 12:35 GMT
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் தேரழந்தூர் கிராமத்தில் கம்பர் பிறந்து வளர்ந்த இடம் உள்ளது. இந்த இடம் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் கம்பர் பிறந்து வளர்ந்த இடம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக அந்த இடத்தில் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட இடத்தை சீரமைத்து பராமரிக்கவும், கம்பருக்கு மண்டபம் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்