நம்பியூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் கடத்தூர் கிராமம் உள்ளது. இங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக ரோட்டில் குழி ஏற்பட்டுள்ளது. இருசக்கர மற்றும் கனரக வாகன ஓட்டிகள் குழியில் சிக்கி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீர் வீணாவதையும், விபத்தை தடுக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும் என்ற செய்தி 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.