விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் கிராமத்தில் இருந்து வந்த பொதுகழிவறை கட்டிடம் கால்நடை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக வேறு கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை. கழிவறை வசதி இல்லாததால் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆதலால் கழிவறை வசதி ஏற்படுத்திட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.