ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி 15-வது வார்டு வள்ளுவர் நகரில் பொது சுகாதார வளாகம் பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் பயன்பாடற்ற சுகாதார வளாகத்தில் புதர்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. எனவே புதர்மண்டிய சுகாதார வளாகத்தை புதுப்பித்து மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.