சேலம் பச்சப்பட்டி ஆறுமுக நகர் முதல் குறுக்குத்தெருவில் குப்பைத்தொட்டி இல்லாததால் பொதுமக்கள் அங்கு குப்பைகளை திறந்த வெளியில் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இங்கு குப்பைத்தொட்டி அமைக்க வேண்டும். மேலும் வித்யா நகர், சன்னியாசிகுண்டு மெயின் ரோடுகள் இணையும் பச்சப்பட்டி மெயின்ரோட்டில் போதுமான உயர்கோபுர மின்விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அந்த பகுதியினர் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.