அந்தியூர் வாரச்சந்தை முன்பு சாக்கடை கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் 15 நாட்களாகியும் இதுவரை பணி நடைபெறவில்லை. பள்ளம் திறந்தநிலையிலேயே கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாரச்சந்தைக்கு செல்லும் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பள்ளத்துக்குள் தவறி விழுந்து அசம்பாவித சம்பவம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு சாக்கடை கால்வாயை அமைத்து பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.