பரங்கிப்பேட்டையி்ல் உள்ள கடல்வாழ் உயிரியல் உயர் ஆராய்ச்சி மையம் அருகே சாலையோரத்தில் இரவு நேரங்களில் மதுப்பிரியா்கள் மதுகுடித்து வருகின்றனர். மேலும் காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசிச்செல்கின்றனர். அருகில் மாணவிகள் தங்கி படிக்கும் விடுதி இருப்பதால், அவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே போலீசார் அடிக்கடி அப்பகுதியில் ரோந்து சென்று மதுப்பிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.