குறிஞ்சிப்பாடி தாலுகா ஆயிக்குப்பம் ஊராட்சி இடங்கொண்டாம்பட்டு கிராமத்தில் ரேஷன்கடை கட்டிடம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் பலத்த சேதமடைந்து சிமெண்டு காரைகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் கட்டிடம் மிகவும் பலவீனம் அடைந்துள்ளதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் நிகழும் முன் சேதமடைந்த ரேஷன்கடை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.